• Fri. Apr 17th, 2026
WhatsAppImage2026-04-16at222113
previous arrow
next arrow
Read Now

சோழவந்தானில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் விழா: திமுகவினர் அன்னதானம்

ByN.Ravi

Jun 3, 2024

சோழவந்தானில், முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் விழா வெங்கடேசன் எம். எல். ஏ. அன்னதானம் வழங்கினார். முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, மதுரை வடக்கு மாவட்டம், சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பாக அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு, வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் பசும்பொன்மாறன், சோழவந்தான் பேரூராட்சி தலைவர் எஸ்.எஸ்.கே.ஜெயராமன், பேரூர் செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் முன்னிலை வகித்தனர். சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி,
பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கினார். இதில், பேரூர் கழக நிர்வாகிகள் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட கிளைக் கழக நிர்வாகிகள் இளைஞர் அணியினர் மாணவர் அணியினர் தொண்டர் அணியினர், தொழிலாளர் முன்னேற்ற சங்க நிர்வாகிகள் மகளிர் அணியினர் மற்றும் திமுகவின் பிற அணியினர் தொண்டர்கள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முள்ளி பள்ளம் கிளைச் செயலாளர் கேபிள் ராஜா நன்றி கூறினார்.