• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

‘என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட்’ சஸ்பெண்ட்

Byவிஷா

May 31, 2024

இன்று பணி ஓய்வு பெறும் நாளில் என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் வெள்ளத்துரை சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பது காவல்துறையினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
2004ல் சந்தனமரக் கடத்தல் வீரப்பனை என்கவுண்ட்டர் செய்ததில் குறிப்பிடத்தக்கவர் இந்த வெள்ளத்துரை ஏடிஎஸ்பி. 2003ல் சென்னையில் அயோத்தி குப்பம் வீரமணி உட்பட 12 என்கவுண்ட்டர்களை செய்தவர். கூடுதல் காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்த வெள்ளத்துரை, இன்றுடன் பணி ஓய்வு பெற இருந்தார். இந்நிலையில், திடீரென சஸ்பெண்ட் செய்யப்பட்டது. காவல்துறைகளிடயே பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.
2013ல் சிவகங்கை மாவட்டத்தில் நடந்த லாக்கப் மரணம் தொடர்பாக வெள்ளத்துரைக்கு சம்பந்தம் இருப்பதாக விசாரணையில் முடிவான நிலையில், அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காவல் துணைக் கண்காணிப்பாளராகப் பணியைத் தொடங்கிய அவர், திருவண்ணாமலை மாவட்ட குற்ற ஆவண காப்பக ஏடிஎஸ்பி-யாக பணிபுரிந்து வந்தார். ஏடிஎஸ்பியான வெள்ளத்துரை இன்று மே 31ம் தேதியுடன் ஓய்வு பெறும் நிலையில் நேற்று இரவு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதற்கான ஆணை நேற்று இரவே வெள்ளத்துரைக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.