• Wed. Sep 2nd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

பிரதமர் மோடி குமரி விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் தியானம். தேர்தல் ஆணையத்திடம் புகார்-தமிழக காங்கிரஸ் தலைவர் அறிவிப்பு

மே 30 முதல் ஜூன் 1 வரை பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரியில் தியானம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளி வருகிறது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் இதுபோன்ற நிகழ்ச்சிக்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளிக்கக் கூடாது.

வாக்குப்பதிவுக்கு முந்தைய 48 மணிநேர அமைதிக் காலத்தில் இதுபோன்ற நிகழ்ச்சியின் மூலம் ஊடகங்கள் வாயிலாக மோடி மறைமுகப் பிரச்சாரம் செய்ய முயற்சிக்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் நாளை கடிதம் கொடுக்கப்பட உள்ளது. தேவைப்பட்டால், நீதிமன்றத்தையும் அணுகுவோம்”

-கு.செல்வப்பெருந்தகை,
மாநில தலைவர்,
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி.