110 நாட்கள் தவெக அரசு சர்ச்சை மிகுந்த ஆட்சியாக மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திவருகிறது. தமிழக வெற்றிக் கழகம் தனது தேர்தல் அறிக்கையில் பல்வேறு வாக்குறுதிகளை வாரி வழங்கியது.
சாத்தியமில்லாத ,நிறைவேற்ற முடியாத திட்டங்களை உங்கள் வீட்டுப் பிள்ளை விஜய் கொடுத்து மக்களை ஏமாற்ற மாட்டேன் என்று சொன்னார்.
தவெக அரசு அமைந்தவுடன் முதல்வர் எப்போது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற அறிவிப்பு கொடுப்பார் என தொடர்ச்சியாக கேள்வி எழுந்து வருகிறது.

ஆனால் தேர்தல் வாக்குறிதிகளில் வெளியிடப்பட்ட முக்கியமான
அறிவிப்புகளை தள்ளி வைத்துவிட்டு, ஒரு சில அறிவிப்புகளை செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கஜானாவை சுத்தமாக வழித்து துடைத்து போய்விட்டார்கள், 10 லட்சம் கோடிக்கு மேல் கடனை வைத்து விட்டு சென்றுவிட்டனர் என்று சொல்லி தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற விஜய் தமிழக மக்களிடம் கால அவகாசம் கேட்டிருக்கிறார்.
110 நாட்களை கடந்துவிட்ட தவெக அரசு நிதி பற்றாக்குறை என்ற காரணத்தை சொல்லி, நலத்திட்டங்களை முடக்கி வைத்து காலதாமதம் செய்து வருவது 110 நாட்கள் ஆட்சியின் சாதனையாக நாம் பார்க்கிறோம்.
தற்போதைய நிதி பற்றாக்குறை கடந்த ஆட்சி காலங்களில் பெற்ற கடன் தான் காரணம் என்று ஒருபுறம் கடுமையாக விமர்சித்து வந்த தவெகஅரசின் முதலமைச்சர் விஜய், மறுபுறம் மாதம், மாதம் கடனை வாங்கி வருவது எந்த விதத்தில் நாம் எடுத்துக் கொள்வது என்பது தெரியவில்லை.

ஆட்சிக்கு வந்த 110 நாட்களில் தவெக அரசு எடப்பாடியார் சொன்னதை போல 28 ஆயிரம் கோடிக்கு மேல் கடன் வாங்கி இருக்கிறது இந்த நிதிநிலை சீர்படுத்துகிற நடவடிக்கை என்று சொன்னால் கூட நிதிநிலை சீர்படுத்துற நடவடிக்கையில்
ஆட்சி வந்த உடன் 200 யூனிட் மின்சாரம் என்று அறிவித்துவிட்டு ,நிதிநிலையை காரணம் காட்டி மக்களுக்கு ஷாக்கடிப்பது போல மின் கட்டணத்தை அறிவிக்காமல் கடுமையாக உயர்த்தி உள்ளது தவெக அரசு. மக்கள் போராட்ட களத்திற்கு வந்ததற்கு பிறகு மறு ஆய்வு என்று சொல்லி அதில் மர்மத்தை இன்றும் தொடர்கிறது.
சொத்து வரி உயர்வு அறிவிப்பு அதற்கு பிறகு எதிர்ப்பு வந்ததற்கு பிறகு அதிலும் நடவடிக்கை கிளப்பில் போடப்பட்டு அந்த மர்மமும் தொடர்கிறது.
28 ஆயிரம் கோடி இந்த 110 நாட்கள் வாங்கிய அரசு இந்த ஆண்டு மட்டும் ஒரு லட்சத்து 22,000 கோடி வாங்குவதற்கு நிதிநிலை அறிக்கையில் இன்றைக்கு இலக்கு வைத்திருக்கிறது .நிதித்துறை செயலாளர் 50 ஆண்டுகள் ஆனாலும் கடனை அடக்க முடியாது என்று ஒப்புதல் வாக்குமூலத்தை கொடுத்து தவெக அரசின் இயலாமையை போட்டு உடைத்துள்ளார்.
நிதி நிலையை சமாளிக்க டாஸ்மாக் வருமானத்தை 51,000 கோடியில் இருந்து 56,000 வழியாக உயர்த்துவதற்கு இலக்கு நிர்ணக்கப்பட்டு இருக்கிறது .
மேலும் 15,000 கோடி வருமானத்தை கூடுதலாக இந்த ஆண்டு பெறுவதற்கு சாத்திய கூறுகள் உள்ளதாக நிதி அமைச்சர் சொன்னார்.

ஆனால் தற்போது பதிவு துறையில் நிலங்களுக்கான வழிகாட்டுதல் மதிப்பை 60 சதவீதம் வரை உயர்ந்த திட்டமிட்டுள்ளதாக செய்தி வெளியாகி இருக்கிறது .எந்த விதமான சுற்றறிக்கையும், அறிவிப்பும் கொடுக்காமல் கள ஆய்வுகளும் மேற்கொள்ளாமல், இடத்தின் தன்மையை மதிப்பிடாமல் பதிவுத்துறை தன்னிச்சையாக இந்த வழிகாட்டு மதிப்பை உயர்த்துவதை கடுமையான கொந்தளிப்பு மக்களிடத்தில் ஏற்படுத்தி உள்ளது.
எந்த கள ஆய்வு செய்யாமல் பதிவாளர்களிடம் தகவல்களை பெற்று செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி வழிகாட்டு மதிப்பை பதிவுத்துறை உயர்த்துவதாக கூறப்படுவது எப்படி இது சரியான அணுகு முடியா?
பொதுவாக அதிகமாக விற்பனையாகும் பகுதிகளை அந்த இடங்களை ஆய்வு செய்து, தேர்வு செய்து மதிப்பை கூட்டுவது ஒரு அணுகுமுறையாக பார்க்கப்படுகிறது. ஆகவே அதிகமாக விற்பனையாகும் இடங்களை செய்து தேர்வு செய்து மதிப்பீட்டை கூட்டாமல் அதைவிடுத்து, ஒட்டுமொத்தமாக அனைத்து இடங்களுக்கும் மதிப்பீட்டை உயர்த்துவது சரியான அணுகுமுறையாக நமக்கு தெரியவில்லை இன்றைக்கு மக்கள் இடத்தில்இந்தக் கேள்வி எழுந்துள்ளது.
சரியான அணுகுமுறை, நில மதிப்பீடு ஆய்வறிக்கை, குடியிருப்போர் நல சங்கத்திலும் கலந்து ஆலோசிக்க வேண்டும் ஆனால் இந்த நடவடிக்கைக்கு எந்த சுற்றறிக்கையும் அரசாணையோ கூட வெளியிடாமல் நடத்தப்படுவதாக செய்திகள் சொல்லப்படுகிறது
இந்த வழிகாட்டு மதிப்பை 60% உயர்த்துவதால் வீட்டு மனைகள் விலைகளை உயரும் நிலை ஏற்படும். இதனால் வீடு வாங்கும் சாமானிய மக்களின் கனவு நிறைவேறாமல் போகும்.
110 நாட்கள் தவெக அரசில் விலைவாசி உயர்வு குறித்து எடப்பாடியார் சட்டசபையில் சிறப்பு தீர்மானம் வந்தார்கள் அப்போது முதல்வர் ஜோதிடர் அறிவுரைப்படி புழல் சிறையை ஆய்வு செய்ய திடீரென்று புறப்பட்டு சென்று விட்டார்.
விலைவாசி உயர்வு மக்களுக்கு ஆதரவான பதில் சட்டமன்றத்தில் கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது

அரிசி ,பருப்பு, ஜீனி, எண்ணெய், கத்திரிக்காய், வெண்டைக்காய், தக்காளி, வெங்காயம் என அத்தியாவசிய பொருட்கள் உயர்வால் துவண்டு போன மக்களை இது மேலும் மேலும் துன்புறுத்தும் வகையில் உள்ளாக்கி வருவதை தவெக அரசு இலட்சியமாகக் கொண்டிருக்கிறது. என்னவோ தெரியவில்லை
ஆகவே விலைவாசி உயர்வு மக்களை வாட்டிவதைகின்ற வகையில் ஒரு புறத்தில் இருக்கிறது.மறுபுறத்தில் மின்சார கட்டணம் உயர்வு, சொத்து வரி உயர்வு ,இன்னைக்கு நிலத்தின்மதிப்பு 60 சகவீதம் உயர்த்துவது என தவெக அரசின் தடாலடி நடவடிக்கையால் , தடுமாறி போய் இருக்கிறார்கள் தமிழக மக்கள் எனக் கூறினார்.




