• Wed. Jul 22nd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

சவுக்கு சங்கருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு…

BySeenu

May 14, 2024

யூடியூபர் சவுக்கு சங்கரை கோவை மாநகர சைபர் கிரைம் காவல்துறையினர் கடந்த நான்காம் தேதி தேனியில் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். அவர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்க பதிவு செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அவருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதை தொடர்ந்து கோவை அரசு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மாவு கட்டு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் அவரை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க போலீசார் மனு தாக்கல் செய்த நிலையில் நேற்றைய தினம் அதனை விசாரித்த கோவை 4வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சரவணபாபு ஒருநாள் கஸ்டடி வழங்கி அனுமதி அளித்தார். அதனைத் தொடர்ந்து இன்று மாலையுடன் கஸ்டடி முடிந்ததை தொடர்ந்து சவுக்கு சங்கரை போலிசார் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இந்நிலையில் சவுக்கு சங்கரின் நீதிமன்ற காவலை 28ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். இதனிடையே தனக்கு கை முறிந்துள்ளதால் தனியாக இருக்க முடியாது எனவும் தன்னை மெண்ட்டல் பிளாக்கில் இருந்து வேறு பிளாக்கிற்கு மாற்றுமாறு சவுக்கு சங்கர் கோரிக்கை வைத்தார். தொடர்ந்து அதனை மனுவாக அளிக்கும்படியும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணையக் குழுவிற்கு பரிந்துரை செய்வதாகவும் நீதிபதி பதிலளித்தார்.

பின்னர் சவுக்கு சங்கரை காவல்துறையினர் மீண்டும் கோவை மத்திய சிறைக்கு அழைத்துச் சென்றனர்.