• Tue. Feb 3rd, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

பிளஸ் 2 தேர்வில் இரட்டையர்கள் 478 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி

Byவிஷா

May 7, 2024

நேற்று வெளியிடப்பட்ட பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகளில், வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த இரட்டையர்கள் தலா 478 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருப்பது பலரையும் வியப்படைய வைத்திருக்கிறது.
பஞ்சநதிக்குளம் மேற்கு விக்டரி மேல்நிலைப்பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்த மாணவர்கள் செ.நிகில், செ.நிர்மல் இரட்டைச் சகோதரர்கள். இவர்கள் இருவரும் நேற்று வெளியான பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகளில் தலா 478 பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இரட்டைச் சகோதரர்கள் ஒரே பள்ளியில் ஒரே வகுப்பில் படித்து, ஒரே மதிப்பெண் பெற்றிருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது. தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் மார்ச் 1 முதல் 22-ஆம் தேதி வரை நடைபெற்றன. இதையடுத்து பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகின. தேர்வெழுதிய மாணவர்களில் 94.56 சதவீதம் பேர் தேர்ச்சிபெற்றுள்ளனர். கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் சற்று அதிகரித்துள்ளது.