• Mon. Jan 26th, 2026
WhatsAppImage2026-01-22at2244171
previous arrow
next arrow
Read Now

தமிழகத்தில் 15 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

Byவிஷா

Apr 24, 2024

தமிழகத்தில் நாளுக்கு நாள் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் சேலம், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் 15 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி ஈரோடு, சேலம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.