• Wed. Mar 4th, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.280 குறைவு

Byவிஷா

Apr 18, 2024

22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 குறைந்து ரூ.6,835க்கும், சவரனுக்கு ரூ.280 குறைந்து ரூ.54,680க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார காரணிகளின் அடிப்படையிலேயே தங்கத்தின் விலை தீர்மானிக்கப்படுகிறது. தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவில் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக இருக்கிறது. தொடர்ந்து, கடந்த சில தினங்களாக ஏற்றம் இறக்கம் என காணப்பட்டு வந்த நிலையில், இன்று (ஏப்ரல்.18) விலை குறைந்துள்ளது.
அதன்படி, 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 குறைந்து ரூ.6,835க்கும், சவரனுக்கு ரூ.280 குறைந்து ரூ.54,680க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.90.00க்கும், ஒரு கிலோ ரூ.90,000க்கும் விற்பனையாகிறது.