• Fri. Sep 25th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

அரசு மதுக்கடை கழிவுகளால் மாசடைந்து வரும் வனப்பகுதி

ByJeisriRam

Apr 16, 2024

தேனி புதிய பேருந்து நிலையம் அருகே அரசு மதுபான கடைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் மற்றும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக், பாட்டில்கள் உள்ளிட்டவைகளால் அருகே உள்ள வனப்பகுதி முழுவதும் மாசடைந்து வருவதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய பேருந்து நிலையத்திலிருந்து என்ஆர்டி நகர் செல்லக்கூடிய சாலையில் அரசு மதுபான கடை எண் 8536 செயல்பட்டு வருகிறது.

இந்த அரசு மதுபான கடைகளிலிருந்து தினந்தோறும் வெளியேற்றப்படும் கழிவுகள் முழுவதும் அருகே உள்ள வடபகுதியை செல்வதாலும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் மதுபான பாட்டில்கள் உள்ளிட்டவர்களால் அருகே உள்ள வனப்பகுதி முழுவதும் மாசடைந்து வருகிறது.

மேலும் வனப்பகுதியில் அடிக்கடி பிளாஸ்டிக் கழிவுகள் தீயிட்டு கொளுத்துவதாலும், குடிமகன்கள் வனப்பகுதியில் உள்ளே மது அருந்தி ஆங்காங்கே பாட்டில்களையும் வீசி செல்கின்றனர்.

எனவே இது குறித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் வனத்துறையினர், மாவட்ட நிர்வாகம் மாசடையில் வரும் வனப்பகுதியை காக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.