• Fri. Sep 25th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

விஜய் போலவே காரின் சன்ரூஃப் வழியாக நின்றபடி கையசைத்து சென்ற நடிகர் தனுஷ்…

ByKalamegam Viswanathan

Sep 25, 2026

சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி மாரநாடு கருப்புசாமி கோவிலில் நாளை தனுஷின் புது பட பூஜை கலந்து கொள்ள நடிகர் தனுஷ் எஸ் ஜே சூர்யா நாயகி ப்ரீத்தி மோகன் உட்பட திரை குழுவினர் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை விமான நிலையம் வந்தடைந்தனர்.

அப்போதுமதுரை விமான நிலையத்தில் முதல்வராகவதற்கு முன்பு வருகை தந்த விஜய் போலவே காரின் சன்ரூஃப் வழியாக நடிகர் தனுஷ் கையசைத்து சென்றார்.

மதுரைக்கு பலமுறை சூட்டிங் குலதெய்வம் கோவில் வழிபாடு என தனியாக வந்து சென்ற தனுசை இந்த முறை தேசிய விருது பெற்ற முதல்முறையாக வருவதால் அவரது ரசிகர்கள் ஆரவாரத்துடன் வரவேற்றனர்.

மதுரை விமான நிலையம் வந்து நடிகர் தனுசுக்கு அவரது ரசிகர்கள் மாலை,வேல் மற்றும் மலர் கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர். ரசிகர்கள் மத்தியில் நடந்த நடிகர் தனுஷ் ரசிகர்கள் கன்னத்தை கொஞ்சி வரவேற்றனர்.

தனுஷ் ரசிகர்கள் காரை சுற்றி நகர விடாமல் ரசிகர்கள் நின்றதால் கார் ஓட்டுநர் காரை சிறிது தூரம் பின்னோக்கி நகர்த்தி அதன்பின் முன்னே எடுத்துச் சென்றார் இதனால் லேசான பதட்டம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து மதுரை விமான நிலையத்தில் இருந்து நடிகர் தனுஷ் காரில் புறப்பட்டார்.