• Fri. Sep 25th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

அமைச்சர் சொல்லியும் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கடும் கண்டனம்…,

ByKalamegam Viswanathan

Sep 25, 2026

சோழவந்தான் அருகே நகரி பகுதியில் உள்ள தனியார் கெமிக்கல் கம்பெனி தங்களது கம்பெனியில் இருந்து வெளியேற்றப்படும் கெமிக்கல் கழிவுகளை அருகில் உள்ள சாலை ஓரங்களிலும் மற்றும் வயர்களிலும் கொட்டுவதால் பொதுமக்கள் மற்றும் கால்நடைகளுக்கு பல்வேறு உடல் நல கோளாறுகள் ஏற்படுவதாக பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த பகுதியில் ஏராளமான தனியார் கம்பெனிகள் செயல்பட்டு வருகிறது இங்கு செயல்பட்டு வரும் கெமிக்கல் கம்பெனி தங்களது நிறுவனத்தின் கெமிக்கல் கழிவுகளை நகரி சோழவந்தான் சாலை ஓரங்களில் உள்ள வயல்களில் கொட்டுவதாகவும் மேலும் அய்யங்கோட்டை தனிச்சியம் பகுதியில் உள்ள மதுரை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் கொட்டுவதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர். அவ்வாறு கொட்டப்பட்டுள்ள கெமிக்கல் கழிவுகளில் இருந்து நச்சு காற்று வெளியேறு செல்வதாக கூறுகின்றனர்.

இந்த நிலையில் சாலை ஓரங்களில் கொட்டி கிடந்த கழிவுகளில் விளையாடச் சென்ற நகரி பகுதியைச் சேர்ந்த சிறுவனுக்கு முழங்காலுக்கு கீழே கெமிக்கல் கழிவுகள் மூலம் காயம் ஏற்பட்டு வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தார். அப்போது மருத்துவமனைக்கு திடீர் ஆய்வுக்கு வந்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் சிறுவனுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து கேட்டறிந்த போது நகரி பகுதியில் உள்ள கெமிக்கல் கம்பெனியின் கழிவுகள் மூலம் காயம் ஏற்பட்டதாகவும் இதனால் முழங்கால் அழுகி இருப்பதாகவும் கூறினார்கள். அதிர்ச்சி அடைந்த அமைச்சர் பொது இடங்களில் கொட்டியுள்ள கெமிக்கல் கழிவுகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.

கழிவுகளை கொட்டிய நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு சென்றார். ஆனால் அமைச்சர் கூறி சென்று 15 நாட்கள் ஆகியும் தற்போது வரை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் கால்கள் பாதித்த சிறுவனுக்கும் நிவாரணம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. தற்போது வரை விவசாய நிலங்கள் மற்றும் சாலை ஓரங்களில் தொடர்ச்சியாக கெமிக்கல் கழிவுகளை கொட்டியபடியே உள்ளனர்.

மேலும் கெமிக்கல் கழிவுகள் உள்ள வயல்களில் கால்நடைகளும் தங்கள் உணவுக்காக கூட்டம் கூட்டமாக மேய்ந்து வருகின்றனர். இதனால் கால்நடைகளுக்கும் பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. ஆகையால் பொதுமக்கள் மற்றும் கால்நடைகளுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கெமிக்கல் கழிவுகளை கொட்டும் தனியார் நிறுவனம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் மாசு கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் உடனடியாக இந்த பகுதியில் உள்ள தனியார் கெமிக்கல் நிறுவனங்களை ஆய்வு செய்து உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.