• Fri. Sep 18th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

பெரம்பலூர் அடுத்த பிரம்மதேசத்தில் அடியாட்களை வைத்து விவசாயி அண்ணாதுரை நிலம் ஆக்கிரமிப்பு

ByT.Vasanthkumar

Feb 16, 2024

பெரம்பலூர் மாவட்டம் வடக்கு மாதவியில் வசித்து வரும் அண்ணாதுரை என்பவருக்கு மூன்று ஏக்கர்உள்ளது.அண்ணாதுரை நிலத்தை தாண்டி, பெரம்பலூரை சேர்ந்த நல்லு மகன் சுரேஷ் என்பவர் நிலம் வாங்கியுள்ளதாகவும் அந்த நிலத்திற்கு செல்வதற்கு அண்ணாதுரை நிலத்தில் தான் பாதை உள்ளது என்றும் பாதை கேட்டு தொடர்ந்து அண்ணாதுரையை மிரட்டி வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து நேற்று காலை சுமார் 11 மணியளவில் அண்ணாதுரைக்கு சொந்தமான நிலத்தில் 30-க்கும் மேற்பட்ட ஆட்களை அழைத்து வந்து ஜேசிபி இயந்திரத்தை வைத்து பாதை போட்டதாகவும் இதை தடுக்க முயன்றால் பல ஆயுதங்களுடன் பெயர் தெரியாத நபர்களை வைத்து அங்கே அசம்பாவிதம் செய்வதற்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதகவும் கூறப்படுகிறது.

இதனைக் கண்ட அண்ணாதுரை உயிருக்கு பயந்து மங்களமேடு காவல் நிலையத்தில் இதுகுறித்து விசாரணை செய்து எனக்கு நியாயம் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என விவசாயி அண்ணாதுரை புகார் செய்துள்ளார்.