• Thu. Jun 4th, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

கவிதை 3: பேரழகனே..!

பேரழகனே..,

கலையாத கனவு ஒன்று வேண்டும் எனக்கு…

அந்த கனவினில் காணும் இடமெல்லாம் நீயே தெரியவேண்டும்…

விடியாத இரவொன்று வேண்டும் எனக்கு…

முடியாத சரசம் வேண்டும்…

பிரிவில் வராமல் உன்னோடு நான் வாழ வேண்டும்…

உன் மடி மீது தான் என் உயிர் போகவேணும்…

கள்ளமில்லா உந்தன் அன்பு வேண்டும்…

கள்ளத்தனமாக எனை நீ கட்டியணைக்க
வேண்டும்..

இந்த பிறவி மட்டுமல்லாது ஏழேழு பிறவிக்கும் உன்னோடு நான் வாழ வேண்டும்…

உன்னை பிரிந்தால் இந்த பிறவி எனக்கு
வேண்டாம் என் மாயனே..!

கவிஞர் மேகலைமணியன்