• Wed. Apr 29th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

உசிலம்பட்டி அருகே கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்த 6 பேர் கைது.., போலீசார் விசாரணை…

ByP.Thangapandi

Jan 26, 2024

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சின்னக்குறவடியில் உள்ள காட்டுப்பகுதியில் கஞ்சா கடத்தி வரப்பட்டு கைமாற்றப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் உத்தப்பநாயக்கணூர் காவல் நிலைய போலீசார் அப்பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனையின் போது வாடிப்பட்டி பகுதியிலிருந்து கொண்டு வரப்பட்ட கஞ்சா பொட்டலங்களை சின்னக்குறவடி பகுதியில் வைத்து கைமாற்றும் போது கடத்தி வந்த மற்றும் வாங்கி செல்ல வந்த 6 பேர் கொண்ட கும்பலை கையும் கலவுமாக பிடித்த போலீசார் சுமார் 22 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து இந்த கஞ்சா கடத்தல் தொடர்பாக பேச்சியம்மன் கோவில்பட்டியைச் சேர்ந்த இளையராஜா, பூச்சிபட்டியைச் சேர்ந்த மூக்கையா, சின்னக்குறவடியைச் சேர்ந்த மருதுபாண்டி, வி.காமாட்சிபுரத்தைச் சேர்ந்த செல்லத்துரை, வாடிப்பட்டியைச் சேர்ந்த விக்னேஸ்வரன், ஹரிவிக்ரம் என்ற 6 பேரை கைது செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.