

மதுரை மாநகராட்சி துணை மேயர் நாகராஜன் இஸ்லாமிய கல்வி அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் கலந்துகொண்டு தேசியக் கொடியை ஏற்றினார். குடியரசு தினத்தை முன்னிட்டு இஸ்லாமிய கல்வி அறக்கட்டளை வளாகத்தில் மரக்கன்று நட்டார்.

இவ் விழாவில் இந்திய தேசிய லீக் மாநில பொதுச் செயலாளர் எம் நாகூர் ராஜா தலைமை வகித்தார் மற்றும் அறக்கட்டளை மேலாளர் முகமது போத்தி , ஒருங்கிணைப்பாளர் எம் என் முகமது அலி உள்ளிட்ட நிர்வாகிகள் உள்பட 60 பேர் கலந்து கொண்டனர்.



