• Thu. Apr 30th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

உசிலம்பட்டி டிஎஸ்பி நல்லு தலைமையில் காவலர்களுக்கான ஆய்வு முகாம்

ByP.Thangapandi

Dec 30, 2023

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி காவல் சரகத்திற்குட்பட்ட உசிலம்பட்டி நகர் மற்றும் தாலுகா காவல் நிலையம், அனைத்து மகளீர் காவல் நிலையம், போக்குவரத்து காவல் நிலையம் மற்றும் உத்தப்பநாயக்கணூர், எழுமலை, செக்காணூரணி என சுமார் 11 காவல் நிலையங்களில் பணியாற்றும் 155 காவலர்களுக்கு வருடாந்திர உடற் தகுதி மற்றும் அவர்கள் பயன்படுத்தும் தளவாட பொருட்கள் குறித்து ஆய்வு முகாம் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கதேவர் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

இந்த முகாமில் உசிலம்பட்டி டிஎஸ்பி நல்லு தலைமையில் உசிலம்பட்டி காவல் ஆய்வாளர் ஆனந்த், செக்காணூரணி காவல் ஆய்வாளர் திலகராணி உள்ளிட்டோர் காவலர்கள் பயன்படுத்தும் சீருடை, லத்தி, துப்பாக்கி உள்ளிட்ட பொருட்களை ஆய்வு செய்தனர். தொடர்ந்து தளவாட பொருட்களை சிறப்பாக பராமரித்து வரும் காவலர்களுக்கு உசிலம்பட்டி டிஎஸ்பி நல்லு பரிசு வழங்கி பாராட்டினர்.