• Thu. Apr 30th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

உசிலம்பட்டியில் கிராம மக்களின் குடிநீர் அணையை பராமரிப்பு செய்ய கோரி விவசாயிகள், பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டம்

ByP.Thangapandi

Dec 30, 2023

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது அய்யனார்கோவில் அணை. சுமார் 150 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த அணையின் மூலம் எம்.கல்லுப்பட்டி, எம்.பெருமாள்பட்டி, மள்ளப்புரம், அய்யம்பட்டி உள்ளிட்ட 25 க்கும் மேற்பட்ட கிராம மக்களின் குடிநீர் தேவையையும், விவசாய பாசனத்திற்கும் பயண்டைந்து வரும் இந்த அணையை பராமரிப்பு செய்யவும், சிதிலமடைந்து காணப்படும் மதகு பகுதியை சரி செய்ய கோரி விவசாயிகள் தொடர்ந்த அரசு அலுவலர்களிடம் கோரிக்கை மனு அளித்தும் எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த அணையை தூர்வாரி பராமரிப்பு செய்ய கோரியும், மதகு பகுதியை சீரமைக்க கோரியும் இன்று எம்.கல்லுப்பட்டி பேருந்து நிலைய வளாகத்தில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து உண்ணாவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் அரசு அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து அணையை பராமரிப்பு செய்யவில்லை எனில் அடுத்தடுத்து தொடர் போராட்டங்களில் ஈடுபட உள்ளதாக விவசாயிகள் எச்சரிக்கை விடுத்தனர்.