• Thu. Apr 30th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

தமிழகத்தில் மீண்டும் மழை எச்சரிக்கை..!

Byவிஷா

Dec 29, 2023

கடந்த வாரம் தென் மாவட்டங்களில் கொட்டி தீர்த்த கனமழையால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்னும் மீண்டு வராத நிலையில் தமிழகத்தில் மீண்டும் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது மக்களை கலக்கமடைய வைத்துள்ளது.
தமிழகத்தில் பகல் 10 மணி வரை கடலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், தேனி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்மாவட்டங்களில் பெய்த கனமழையால், பாதிக்கப்பட்ட மக்கள் இன்னும் முழுமையாக மீண்டு வராத நிலையில், மீண்டும் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது மக்களை வேதனைப்படுத்த வைத்துள்ளது.