• Fri. May 8th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

கேரளாவில் தாண்டவமாடும் கொரோனா, 3096 பேருக்கு சிகிச்சை

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 128 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3096 ஆக உயர்ந்துள்ளது.

கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 128 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3096 ஆக உயர்ந்துள்ளது. 2 நாட்களில் 700 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.