• Fri. Oct 9th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

ஊழியர்களுக்கு ஷாக் கொடுத்த பேடிஎம் நிறுவனம்

Byவிஷா

Dec 25, 2023

பேடிஎம் நிறுவனத்தின் தலைமை நிறுவனமான ஒன் 97 கம்யூனிகேஷன் நிறுவனத்தின் பல அலுவலகங்களிலும் பணிபுரியும் சுமார் 1000 பேர் பணியிட நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நிதி சேவையை வழங்கும் நிறுவனமான இந்த நிறுவனம் நிதி ஆதாரங்கள் பெருகாதால் கடந்த சில மாதங்களாக செலவின குறைப்பு நடவடிக்கையை திட்டமிட்டு வந்தது. சமீபத்தில் நிதி நிறுவனங்கள் வழங்கும் படங்களுக்கான வழிமுறைகளை ஆர்பிஐ கடுமையாக்கிய நிலையில் பொருளை வாங்கிக் கொண்டு பிறகு பணம் செலுத்துவது உள்ளிட்ட சிறிய கடன் சேவைகளை பேடிஎம் நிறுவனம் நிறுத்திய நிலையில், ஒட்டுமொத்த ஊழியர்களின் எண்ணிக்கையில் 10சதவீத ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளது ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.