• Fri. Oct 9th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

மதுரையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம், தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு வெள்ள நிவாரண பொருட்கள்…

ByKalamegam Viswanathan

Dec 20, 2023

மதுரையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் இரண்டு நாட்களில் 25 முறை சுமார் 22,000 கிலோ இடையில உணவுப் பொருட்கள், குடிநீர், மருந்து பொருட்கள் தூத்துக்குடி மாவட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

புயலால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு வெள்ள நிவாரண பொருட்கள் வழங்குவதற்காக மதுரை விமான நிலையத்தில் இருந்து இரண்டாவது நாளான இன்று 8 ஹெலிகாப்டர்கள் மூலம் 12ஆயிரத்து 264 கிலோ எடையுள்ள உணவுப் பொருள் குடிநீர் மற்றும் மருத்துவ பொருட்கள் கொண்டு செல்லப்பட்டது.

மதுரை விமான நிலையத்தில் இருந்து இரண்டாவது நாளாக காலை 6 மணி முதல் மதியம் 1.40 மணிவரை ஹெலிகாப்டர்கள் மூலம் 16 முறை சுமார் 12,264 கிலோ எடையுள்ள உணவுப் பொருட்கள் குடிநீர் மருந்து பொருட்கள் ஆகியவை கொண்டு செல்லப்பட்டது .

முதல் நாளான நேற்று 9 முறை ஹெலிகாப்டர்களில் சுமார் ஒன்பதாயிரத்து ஆறுநூறு கிலோ(9600 ) எடையில உணவுப் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டது.

நேற்றும் இன்றும் இதுவரை மொத்தம் ஹெலிகாப்டர்கள் மூலம் 25 முறை சுமார் 21 ஆயிரத்து 864 கிலோ எடையில் நிவாரண பொருட்கள் தூத்துக்குடி மாவட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.