• Fri. Oct 9th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

டெங்கு காய்ச்சல் – வீடுகள் தோறும் ஹோமியோபதி மருத்துவ மாத்திரைகள் வினியோகம்..,

ByKalamegam Viswanathan

Dec 20, 2023

திருமங்கலம் அருகே டெங்கு உள்ளிட்ட காய்ச்சலில் இருந்து பாதுகாத்துக் கொள்ள, வீடுகள் தோறும் ஹோமியோபதி மருத்துவ மாத்திரைகள் வீடு, வீடாக வினியோகம் – அரசு ஆரம்ப சுகாதார மருத்துவர்கள் மற்றும் அலுவலர்கள் தீவிரம்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூர் காலனி மற்றும் காந்தி நகர் பகுதியில், சில தினங்களாக அப்பகுதியில் வசிப்போர் காய்ச்சல் நோயால் தாக்கப்பட்டதை அறிந்து, அவர்களை அந்த நோயிலிருந்து விடுவிக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெங்கு உள்ளிட்ட மர்ம காய்ச்சலில் இருந்து பாதுகாத்துக் கொள்ள, ஹோமியோபதி மருத்துவ அதிகாரி மற்றும்  செக்காணூரணி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், செவிலியர்கள், அலுவலர்கள் கிராமத்தில் முகாமிட்டு,  ஊட்டச்சத்து மைய அலுவலர்களுக்கு ஹோமியோபதி மாத்திரைகள் குறித்து விளக்கம் அளித்து, அவர்கள் மூலம் வீடுகள் தோறும், ஓமியோபதி மாத்திரைகளை வழங்கி, அதனை எவ்வாறு பயன்படுத்த வேண்டும்? என்பன உள்ளிட்ட விளக்கத்தை,  வீடுகள் தோறும் ஹோமியோபதி மருத்துவ அலுவலர்கள் விநியோகம் செய்து வருகின்றனர்.
மேலும், இதனைத் தொடர்ந்து ஹோமியோபதி மருத்துவ அலுவலர்கள் மற்றும் செவிலியர்கள் ஒவ்வொரு கிராமமாக நாள்தோறும் வீடு,வீடாகச் சென்று, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காய்ச்சலில் இருந்து பாதுகாத்துக் கொள்ள மாத்திரைகளை வினியோகம் செய்ய உள்ளனர்.