• Wed. Sep 2nd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

வீட்டின் தார்ப்பாய் கூரையை மாற்றி ஷீட் போட்டுக் கொடுத்த குமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த்…

திருவட்டார் கிழக்கு வட்டாரம், ஏற்றக்கோடு ஊராட்சிக்குட்பட்ட கட்டைக்கால் பகுதியில் ஜார்ஜ் என்பவருடைய தார்பாய் வேயப்பட்டிருந்த வீட்டுக் கூரை சேதமடைந்து மழை நீர் வீட்டினுள்ளும் சுவர்களிலும் ஒழுகி இடிந்து விழும் தருவாயில் இருந்து வந்தது. இந்த வீட்டை பராமரிப்பு செய்ய நிதியுதவி கேட்டு ஏற்றக்கோடு ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜாண் லெனின் கோரிக்கை வைத்ததை தொடர்ந்து, காங்கிரஸ் திருவட்டார் கிழக்கு வட்டார தலைவர் வழக்கறிஞர் ஜெபா பரிந்துரையின் பேரில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த்

உடனடியாக மேற்படி வீட்டை வந்து பார்வையிட்டு அவரது சொந்த பணத்தில் தார்ப்பாய் கூரையை மாற்றி ஷீட் போட்டு பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்தார். இன்று பணிகள் முற்றிலும் நிறைவடைந்து வீட்டு உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.