• Mon. Apr 29th, 2024

குமரியில் துளிர்விட்ட இந்திய ஒற்றுமை இயக்கம்..!

இன்னும் சில நாட்களில் புத்தாண்டு 2024 பிறக்க இருக்கும் நிலையில், நாடாளு மன்றத்தின் பொதுத்தேர்தலுக்கு விரல் விட்டு எண்ணும் மாதங்களே இருக்கும் நிலையில், இந்திய ஒற்றுமை இயக்கம், இந்தியா முழுவதும் 155 இடங்களை அடையாளம் கண்டு உள்ளது.
அடையாளம் காணப்பட்டுள்ள 155 நாடாளுமன்ற தொகுதிகளில், 120 தொகுதிகளில் காங்கிரஸ்,பாஜக நேரடியாக மோதும் தொகுதிகள் என்ற நிலையில் தமிழகத்தில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளில், கன்னியாகுமரி, கோயம்புத்தூர், ராமநாதபுரம் மற்றும் புதுவை ஆகிய நாடாளுமன்ற தொகுதிகளில் பாஜக வை எதிர்த்து இந்திய கூட்டணியின் இந்திய ஒற்றுமை இயக்கம், குமரி மக்கள் இயக்கம் என ஒவ்வொரு மாவட்டத்தின் பெயரோடு இந்திய ஒற்றுமை இயக்கம் களத்தில் நிற்கிறது.
குமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில், தொகுதிக்கு ஒரு அமைப்பாளர், 50 உறுப்பினர்கள் என்ற அமைப்பு இன்று நாகர்கோவில் நடைபெற்ற “குமரி மக்கள் இயக்கத்தின்” சார்பில், சுப.உதயகுமாரன், மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் ராஜன், சென்னையை சேர்ந்த சுகுந்தா, கரூரை சேர்ந்த கிறிஸ்டினா சாமி, ஆகியோர் செயல்பட வேண்டிய வெளிப்பாட்டை விளக்கினார்கள்.

ஒவ்வொரு தொகுதியிலும் தேர்வு செய்யபட்ட ஒருங்கிணைப்பாளர், 50 உறுப்பினர்கள் என கன்னியாகுமரி நாகர்கோவிலில் பத்மநாபபுரம் குளச்சல் கிள்ளியூர் விளவங்கோடு என அமைக்கப்பட்ட குழு உறுப்பினர்கள் 100 நாள் வேலை திட்டத்தை ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு முறை சந்தித்த வாக்காளர்களை (குடும்பத்தை) ஒவ்வொரு 5 நாட்களுக்கும் இடையே மீண்டும், மீண்டும் சந்தித்து இந்திய ஜனநாயகம். தனி மனிதன் விரும்பும் மதத்தை, அவர்களின் தாய் மொழி மீது காட்டும் உணர்வு, விரும்பிய உணவு, விரும்பும் கட்சிக்கு வாக்களிப்பது, என்ற சுதந்திரம் என்றும் தொடர, குமரியில் பாஜக வுக்கு எதிராக வாக்களிக்கும் பிரச்சாரத்தை மேற்கொள்வது. அதன் மூலம் “இந்துத்துவா” என்ற பிரச்சாரத்தை முறியடிக்க வேண்டும் என்பதை குமரி ஒற்றுமை இயக்கம் பார்வையாளர்கள் முன் பங்களிப்பாளர்கள் அடிக்கோடிட்டு காண்பித்தனர்.
இந்திய ஒற்றுமை இயக்கம் தமிழகத்தில் தேர்வு செய்துள்ள, கன்னியாகுமரி, கோவை மக்களவை தொகுதிகளில் ஏற்கெனவே பாஜக வெற்றி பெற்ற தொகுதிகள் என்ற நிலையில் அதிகமான முனைப்புடன் களப்பணி ஆற்ற வேண்டும் என்பதே இந்திய ஒற்றுமை இயக்கம் மேற்கொள்ளும் பணி என்பதை சுப.உதயகுமரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *