• Wed. Sep 2nd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

கவுன்சிலர் வீட்டிற்குள் புகுந்த பாம்பு..,

குமரி மாவட்டம் குளச்சல் பகுதியை சேர்ந்த அன்வர் சதாத். இவர் குளச்சல் நகராட்சி கவுன்சிலர். இவரது வீட்டினுள் 7 அடி நீளம் உடைய சாரை பாம்பு நுழைந்து செல்வதை அக்கம் பக்கத்தினர் பார்த்து விட்டனர்.

வீட்டிற்குள் இருந்தவர்கள் இடம் பாம்பு புகுந்துள்ள தகவலை சொல்லியதுடன், வீட்டிற்குள் எந்த சத்தமும் ஏற்படுத்தாது அமைதியாக எச்சரிக்கை உடன் இருங்கள். தீ அணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தாச்சு. உடன் வந்து விடுவார்கள் என தெரிவித்தனர்.

தீ அணைப்பு துறையினர் வீட்டினுள் மார்பிள் கற்களுக்கு இடையே பதுங்கி இருந்த பாம்பை குச்சி போன்ற ஒரு கருவியை வைத்து பாம்பை லாவகமாக பிடித்து பிளாஸ்டிக் சாக்கினுள் எடுத்து சென்றனர். கவுன்சிலர் வீட்டினுள் இருந்த பாம்பை தீ அணைப்பு வீரர்கள் பிடித்து சென்ற பின்னரே அந்த பகுதியில் உள்ள வீடுகளில் உள்ள மக்கள் நிம்மதி அடைந்தனர்.