• Tue. Jul 21st, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

*பச்சை நிறமாக மாறும் தண்ணீர் – மேட்டூர் மக்கள் அதிர்ச்சி*

Byமதி

Oct 26, 2021

சேலம் மாவட்டம் மேட்டூர் டேமில் ரசாயனக் கழிவுகள் கலந்த தண்ணீர் வருவதால் பச்சை நிறமாக நீர் மாறுகிறது. இதனால் பொதுமக்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனை தமிழக அரசு நீர்வளத் துறை சார்ந்த உயர் அதிகாரிகளை கொண்டு விரைவில் சோதனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

ஏனென்றால், இது மழைக்காலம் என்பதால் மேட்டூர் அணை 102 அடி தாண்டி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. அணை நிரம்பிவிட்டால் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து வேண்டிவரும். ஆகையால் தமிழக அரசு இதற்கு உடனடி தீர்வு காண வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.