• Thu. Jul 23rd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

தேனியில் மாநில அளவிலான கபாடி போட்டி…

ByM. Dasaprakash

Nov 20, 2023

கூடலூர் அருகே உள்ள குள்ளப்பகவுண்டன்பட்டியில் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு மாநில அளவிலான கபாடி போட்டி நடைபெற்றது. இந்த போட்டியினை ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ மகாராஜன் தொடங்கி வைத்தார்.

இந்தப் போட்டியில் சென்னை, மதுரை திண்டுக்கல், தேனி உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான அணியினர் கலந்து கொண்டனர்.

கால் இறுதி அரை இறுதி போட்டி என இரண்டு நாட்களாக நடைபெற்று இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று முதல் நான்கு இடங்களை பிடித்த வீரர்களுக்கு ரொக்கப் பரிசு மற்றும் கேடயத்தினை பரிசாக வழங்கப்பட்டது.

போட்டிக்கான ஏற்பாடுகளை கேலக்ஸி கபடி குழுவினர் செய்திருந்தனர்.
ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்து விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்தினர்.