• Fri. Oct 10th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

கணவனை பிரிந்து காதலனுடன் வாழ்ந்த பெண்… கணவனுக்கு பிறந்த பச்சிளம் 3_மாத குழந்தையின் மரணத்தில் மர்மம்…

மயிலாடி அருகே மூன்று மாதமே ஆன ஆண் குழந்தை மர்ம சாவு. போலீசார் தீவிர விசாரணை. அஞ்சு கிராமம் நவம்பர் 18 நித்திரவிளை போலீசரகத்திற்கு உட்பட்ட நித்திரை விளை சமத்துவபுரத்தைச் சேர்ந்தவர் லாசர். இவரது மகள் பிரபுஷா (வயது 23) இவருக்கும் அதே பகுதியைச் சார்ந்த சீனு என்பவரும் காதலித்து, பின்னர் பெற்றோர் சம்மதத்துடன் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு மேகஸ்டன்( வயது3), பீயூலஸ் (வயது 1 1/4 ) இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். கணவன், மனைவிக்கு இடையில் அடிக்கடி சன்டை நிகழ்ந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த எட்டு மாதத்திற்கு முன்பு கணவர் சீனுவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில் பிரபுஷா தன் தாயார் வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் தூத்தூர் பகுதியில் ஹோட்டலில் வேலை பார்த்த சதாம் உசேன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு பழகி வந்துள்ளனர். இதனையடுத்து கணவர் சீனுவுக்கும், மனைவி பிரபுஷாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு போலீஸ் நிலையம் சென்றுள்ளனர். மேலும் மூத்த மகன் மேகஸ்டன் தந்தை சீனுவுடனும், இளைய மகன் பியூலஸ் தாயார் பிரபுஷாவுடனும் பிரிந்து செல்வதாக பேச்சுவார்த்தை நடந்து பிரிந்துள்ளனர். இந்நிலையில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன் பிரபுஷா தயார் வீட்டை விட்டு வெளியேறி கள்ளகாதலன் சதாம் உசேனுடன் மயிலாடி கூண்டுபாலம் தனியார் பள்ளி அருகில் உள்ள கோழிப்பண்ணையில் உள்ள வீட்டில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளனர். மேலும் நேற்று முன்தினம் குழந்தை பியூலஸ்க்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது இதனையடுத்து ஆசாரிபள்ளம் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். பியூலஸ்ஸை பரிசோதித்த டாக்டர் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளார். மேலும் குழந்தை மரணம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் அஞ்சு கிராமம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து அஞ்சுகிராமம் போலீசார் மற்றும் நித்திரவிளை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அஞ்சுகிராமம் போலீஸ் சரக பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

நடந்தது என்ன……..
மயிலாடி அருகே 1 1/4 வயது மழலை குழந்தை பியூலஸ் சாவுக்கு குழந்தை இடையூராக இருக்கும் என்பதலா அல்லது முதல் கணவரின் வாரிசு தேவையில்லை என்ற முடிவாலா அல்லது தாயாரும், கள்ளகாதலனும் சேர்ந்து அடித்து கொன்றார்களா அல்லது தொட்டிலில் இருந்து குழந்தை தவறிவிழுந்து இறந்துவிட்டதா அல்லது உணவின்றி இறந்ததா என தாயார் பிரபுஷா, கள்ளகாதலன் சதாமிடம் கன்னியாகுமரி சரக டிஎஸ்பி மகேஷ்குமார், அஞ்சுகிராமம் சபா இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார், கதிரேசன் துருவி, துருவி விசாரித்து வருகின்றனர்.