• Wed. May 15th, 2024

முக்கடல் சங்கம பகுதியை ஆய்வு செய்த, மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த்..,

இந்தியா மட்டும் அல்ல உலகம் முழுவதும் இருந்து தினம் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வரும் சர்வதேச சுற்றுலா பகுதியான கன்னியாகுமரியில், இயற்கையின் அதிசயம். மூன்று கடல்கள் சங்கமம் ஆகும் பகுதியான திருவேணி சங்கமம் பகுதி மக்கள் கடலில் புனித நீராடும் பகுதி, கொரோனா காலத்திற்கு முன் இயற்கையான மண் பரப்பாகவே இருந்தது.

கடல் அலை கரையில் எவ்வளவு தூரம் அலை கூட்டங்கள் வந்தாலும் யாருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லாமல் இருந்தது.

ஒன்றிய அரசின் கடற்கரை மேம் பாட்டு திட்டத்தில், ஒன்றிய அதிகாரிகள் உருவாக்கிய திட்டத்தின் படி. கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் மணல் பாங்கான பகுதியில் மக்கள் புனித நீராடிய பகுதியில். மண் பரப்பு பகுதியில் கருங்கல்லால் சப்பாத்து போன்ற பகுதியை உருவாக்கினார்கள்.

கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி மேற்பார்வையில் இந்தப் பணிகள் நடைபெற்றது.

கடல் மணல் பரப்பில் கல்லால் சப்பாத்து அமைக்கும் பணிக்கு, அன்றைய கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் வசந்த குமாரின் நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் பணம் ஒதுக்கப்பட்டது.

மணல் பரப்பில் சப்பாத்து அமைத்தால், எப்போதும் அலை அடித்துக் கொண்டிருக்கும் பகுதியில் பாசி படியும், இதனால் கடலில் நீராடுபவர்கள் “கால்” வழுக்கி கிழே விழும் நிலை ஏற்படும் என்ற எச்சரிக்கையை ஒன்றிய அரசின் அதிகாரிகளிடம் தெரிவித்த போது அதனை ஒன்றிய அரசு அதிகாரிகள் ஏற்றுக்கொள்ளாத நிலையில் கொரோனா காலத்தில் இந்த பணிகள் முழுமையாக நிறைவடைந்து விட்டது.

முக்கடல் சங்கம கடல் பரப்பில் சப்பாத்து பகுதியில் நீராடிய பலரும் கால் வழுக்கி சம்பத்து பகுதியிலே கீழே விழுந்ததில் பலருக்கும் தலையில் அடி பட்டு ஆம்புலன்ஸ்யில் கன்னியாகுமரியில் உள்ள அரசு மருத்துவ மனைக்கு எடுத்து செல்வதும்.இங்கு சிகிச்சை கொடுக்க முடியாத நிலையில்.

நாகர்கோவில் ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு உயர் சிகிச்சைக்கு அனுப்புவதும்,ஒரு தொடர் கதையாக நீடித்துக்கொண்டு இருப்பதுடன். இரண்டு வட மாநிலத்தவர் குறிப்பிட்ட சப்பாத்து பகுதியில் வழுக்கி விழுந்ததில் தலையில் பலமான காயம் ஏற் பட்டு மரணம் அடைந்தனர்

கன்னியாகுமரி வரும் ஐயப்ப பக்தர்கள் அதிகமாக வரும் இந்த கால கட்டத்தில், அனைத்து ஐயப்ப பக்தர்களும் கடலில் புனித நீராடும் நிலையில் ஐயப்ப பக்தர்கள் மட்டும் அல்லாது, சுற்றுலா பயணிகளின் பாது காப்பு குறித்து, கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த் சம்பந்தப்பட்ட சப்பாத்து பகுதியை தேவஸ்தான அதிகாரி, சுற்றுலா துறை அதிகாரி, கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி அதிகாரிகள் உடன் சம்பந்தப்பட்ட இடத்தில் இன்று ஆய்வு மேற் கொண்ட பின் மூன்று துறையின் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த் படித்துறையில் பாசி படிந்துள்ள பகுதியை முழுவதுமாக அகற்றி விட்டு மண் பரப்பு பகுதியை மீண்டும் உருவாக்கிட நடவடிக்கை எடுக்க இருப்பதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *