• Wed. May 15th, 2024

அன்னை வேளாங்கண்ணி கல்லூரி விழாவில்.., அமைச்சர் மக்களவை உறுப்பினர் பேச்சு…

கன்னியாகுமரி மாவட்டம் அழகப்பபுரம் அருகே உள்ள அன்னை வேளாங்கண்ணி பொறியியல் கல்லூரியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் ஆகியோர் கலந்து கொண்டு அறிவியல் கண்காட்சி குத்து விளக்கு ஏற்றி ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். காண்காட்சியை பார்வையிட்டனர்.

பின்னர் விஜய் வசந்த் எம்பி பேசும் போது, மாணவ, மாணவிகள் தங்களிடம் இருக்கும் திறமைகளை உலகிற்கு வெளிப்படுத்த வேண்டும். மேலும், மாணவ, மாணவிகள் ஏராளமானோர் அறிவியல் திறமை உள்ளவர்களாக இருக்கின்றனர். எனவே அவர்கள் அறிவியல் மூலம் தங்கள் திறமைகளையும் உலகிற்கு கொண்டுவர வேண்டும் என்று மேலும் மாணவ, மாணவிகள் தங்கள் பெற்றோர்களை மதித்து நடக்க வேண்டும் என மாணவ, மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினார். நிகழ்வில் பேசிய அமைச்சர் மனோ தங்கராஜ்,

மாணவ, மாணவிகளிடம் மனதில் ஒரு இலக்கை உருவாக்கி கொள்ள வேண்டும். அதை நோக்கிய உறுதியான பயணம் மேற்கொள்ள வேண்டும். தேவை இல்லாதவற்றில் கவனம் செலுத்தாது, நோக்கம் என்பது கற்கும் காலத்தில், நாம் தேர்வு செய்துள்ள கல்வி பிரிவில் உயர்ந்த மதிப்பெண் கூடிய வெற்றி. அத்தகைய வெற்றி வேலை வாய்ப்பை அதுவாகவே எதிர் காலத்தில் உருவாக்கித் தரும். இன்றைய மாணவர்கள் சிலர். மன இறுக்கம் என தற்கொலை என்ற நிலைக்கு இப்போது கொண்டு வந்து விடுகிறது என்ற செய்திகள் வெளி வருவது, மாணவிகள் கல்வி கடந்து வேறு விஷயங்களில் கவனத்தை திசை திருப்புவதே இதற்கு அடிப்படை. பிள்ளைகள் பற்றி ஒரு கனவு இருக்கும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பற்றிய கனவை நிறை வேற்றுவது பிள்ளைகளின் கடமை என்பதை ஒவ்வொரு மாணவனும், மாணவியும் உணர வேண்டும் என தெரிவித்தார். இதில் கல்லூரி தாளாளர் மற்றும் ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *