• Mon. Aug 31st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

இரும்பு பைப் ஏற்றி வந்த லாரியில் மலைப்பாம்பு…

BySeenu

Nov 7, 2023

கொச்சியில் இருந்து ஆந்திராவுக்கு இரும்பு பைப்பை குமார் என்பவர் லாரியில் ஏற்றி சென்றுள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு எட்டிமடை பைபாஸ் அருகே அந்த வாகனத்தை நிறுத்திய போது, அந்த பகுதியில் ஒரு மலைப்பாம்பு இரும்பு பைப்பில் ஏறியது. இன்று காலை அதனைப் பார்த்த ஓட்டுநர் உடனடியாக போத்தனூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலை அடுத்து அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் அந்த மலைப்பாம்பை வெளியே எடுத்து வருகின்றனர். இந்த மலைப்பாம்பு 10 அடி நீளம் இருக்கலாம் என கூறப்படுகிறது.