• Fri. Aug 14th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

சிவம் மார்ஷியல் ஆர்ட்ஸ், இசிஏ அகாடெமி மற்றும் நேரு யுவ கேந்திர இணைந்து நடத்தும் மாவட்ட அளவில் சிலம்ப கிரேடிங் போட்டி…

ByG.Suresh

Nov 5, 2023

சிவகங்கை மாவட்டம் சிவகங்கையில் உள்ள சிவம் மார்ஷியல் ஆர்ட்ஸ், இசிஏ அகாடெமி , மற்றும் நேரு யுவ கேந்திர இணைந்து நடத்தும் மாவட்ட அளவில், சிலம்ப கிரேடிங் போட்டி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. மாவட்ட விளையாட்டு அலுவலர் ரமேஷ் கண்ணா துவக்கி வைத்தார். இப்போட்டியில் சிவகங்கை காளையார் கோவில் கல்லல், மானாமதுரை, திருப்புவனம், சிங்கம்புணரி, திருப்பத்தூர் காரைக்குடி பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் சுமார் 1000 மேற்ப்பட்டோர் கலந்து கொண்டனர். இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டது.
இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை சிவகங்கை சிவம் மார்ஷியல் ஆர்ட்ஸ் மாஸ்டர் M. பரமசிவம் செய்திருந்தார்.