• Wed. Mar 11th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு..!

Byவிஷா

Oct 31, 2023

தமிழகத்தின் காவிரி டெல்டா விவசாயிகள் பெரிதும் நம்பியுள்ள மேட்டூர் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த 10-ஆம் தேதி அணையின் நீர்மட்டம் 30 அடியாக இருந்த நிலையில், கடந்த சில வாரங்களாக பெய்த மழை காரணமாக, அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து, இன்று காலை 52.12 அடியாக அணையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.
அணைக்கு வரும் நீரின் அளவு நேற்று வினாடிக்கு 3 ஆயிரத்து 454 கன அடியாக வந்து கொண்டு இருந்த நிலையில், இன்று 2 ஆயிரத்து 794 கன அடியாக நீர்வரத்து குறைந்து உள்ளது. அணையின் நீர் இருப்பு 19.17 டிஎம்சியாக உள்ளது. குடிநீர் தேவைக்காக அணையிலிருந்து 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவைவிட, அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு குறைவாக உள்ளதால், அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.