• Tue. Mar 10th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

இருசக்கர வாகனம் அரசு பேருந்தில் மோதி சம்பவ இடத்திலேயே பலி!..

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் நடைபெறும் மருதுபாண்டியர்களின் நினைவு தினத்தில் பங்கேற்க, மானாமதுரை சேர்ந்த அஜித் பாரதி முருகானந்தம், ராஜேஸ் ஆகிய மூவரும் இருசக்கர வாகனத்தில் திருப்பத்தூரை நோக்கி வந்துள்ளனர். அப்போது இருசக்கர வாகனத்தில் சாசகம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மூவரும், ஒக்கூர் அருகே வந்த போது திருச்சியிலிருந்து சிவகங்கை நோக்கி வந்த அரசு பேருந்தில் மோதியதில் சம்பவ இடத்திலேயே அஜித் பாரதி, முருகானந்தம் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

தகவலறிந்த மதகுபட்டி காவல் நிலையத்தினர், விபத்தில் பலியான இருவரது உடலையும் கைப்பற்றி, சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.


படுகாயமடைந்த ராஜேஸ் என்பவர், சிகிச்சைக்காக சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த மதகுபட்டி காவல் நிலையத்தினர், விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.