எஸ் கே ஐ எஃப் இந்தியா சம்மேளனத்தின் 17 வது தேசிய அளவிலான கராத்தே போட்டிகள் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இரண்டு நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் தமிழ்நாடு, கேரளா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட இந்தியா முழுவதும் இருந்து தேர்வு செய்யப்பட்ட வீரர்-வீராங்கனைகள் சுமார் 500 பேர் பங்கேற்றனர்.

இந்த தேசிய அளவிலான போட்டியில் ஆண்கள் பிரிவு பெண்கள் பிரிவுகளில் கட்டா, குமித்தே, குழு போட்டிகள் என 54 பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. விறுவிறுப்பாக நடைபெற்ற கராத்தே விளையாட்டுகளை ஏராளமானோர் மிகுந்த ஆர்வத்துடன் கண்டு களித்தனர். சர்வதேச போட்டியில் கலந்து கொள்ள வீரர் வீராங்கனைகள் தேர்வு நடைபெறுவதால் வீரர்-வீராங்கனைகள் தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தினர். இந்த போட்டியில் தங்கப் பதக்கங்கள் பெறும் வீரர் வீராங்கனைகள் தென் கொரியா நாட்டில் சர்வதேச அளவில் 22வது சர்வதேச அளவிலான கராத்தே போட்டியில் கலந்துகொள்ள தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் போட்டி ஒருங்கிணைப்பாளர் ஸ்டீபன் செய்தியாளரிடம் தெரிவித்தார்.

