• Mon. Sep 21st, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

உடல் உறுப்புதானம் செய்பவர்களின் உடலுக்கு அரசு மரியாதை..,

Byகுமார்

Oct 9, 2023

மதுரை நேதாஜி ரோடு பகுதியில் திருமதி சோலையம்மாள் அவர்கள் வீட்டில் வேலை பார்க்கும் போது தவறி விழுந்து அதில் காயம் அடைந்து வேலம்மாள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி மூளைச் சாவு அடைந்த நிலையில் உடல் உறுப்பு தானம் செய்ய அவரது குடும்பத்தினர் முன் வந்தனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவின்படி உடல் உறுப்புதானம் செய்பவர்களின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்படும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அன்னாரது உடலுக்கு மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மரியாதை செலுத்தினார்.

மதுரை மாநகராட்சி மேயர் அவர்கள், மதுரை மாநகராட்சி ஆணையர் அவர்கள், காவல்துறை துணை ஆணையர் அவர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.