

மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியிகளில் கடந்த இரண்டு நாட்களாக மாலை நேரங்களில் மட்டும் மிதமான சாரல் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் இன்று காலை முதலே திருப்பரங்குன்றம் சுற்றுவட்டார பகுதிகளில் வானம் சற்று மேகமூட்டமாக காணப்பட்டது.
இந்நிலையில் மாலை 5 மணி அளவில் இடியுடன் கூடிய லேசான சாரல் மழை பெய்தது. அப்போது திடீரென இடி இடித்ததில் திருப்பரங்குன்றம் ரயில் நிலையம் பின்புறம் உள்ள இடத்தில் ஒரு பனை மரத்தில் திடீரென இடி விழுந்ததில் அந்த பனைமரம் தீப்பற்றி எரியத் துவங்கியது. மேலும் அந்த காட்சிகள் தற்போது வைரல் ஆகி வருகிறது.

