• Tue. Jun 23rd, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா..!

ByKalamegam Viswanathan

Sep 19, 2023

மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, புறநகர் மாவட்ட இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்யப்பட்டது. புறநகர் மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமையில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. நாராயணபுரம், ஊத்துக்குளி, தென்கரை உள்ளிட்ட இடங்களில் சிலை வைத்து வழிபாடு செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து இரும்பாடி, கருப்பட்டி ,திருமால் நத்தம் உள்ளிட்ட ஊர்களில் உள்ள விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. பூச்சம்பட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரெங்கநாதன், வாடிப்பட்டி ஒன்றிய பொதுச் செயலாளர் ஜீவா, ஒன்றிய தலைவர் முத்துப்பாண்டி, ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், செயற்குழு உறுப்பினர் ராஜசேகர், செல்வம், துணை தலைவர் ராஜா மற்றும் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.