ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் யோகி பாபுவின் ‘மண்டேலா’ திரைப்படம் இடம்பெற்றுள்ளது.
யோகிபாபு – ஷீலா ராஜ்குமார் நடிப்பில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் 4-ஆம் தேதி விஜய் டிவியில் நேரடியாக வெளியான திரைப்படம் ‘மண்டேலா’. இந்த படம் விமர்சன ரீதியாக பல பாராட்டுக்களைக் குவித்தது. நகைச்சுவை நடிகர்-ஹீரோ என பயணித்துவரும் யோகி பாபுவுக்கு காலத்திற்கும் பெருமைப்படக்கூடிய படமாக அமைந்தது ‘மண்டேலா’.
சினிமாத்துறையினருக்கு வழங்கப்படும் உலகின் உயர்ந்த விருதான ஆஸ்கர் விருது சிறந்த வெளிநாட்டு திரைப்படங்களுக்கும் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் அனுப்பவுள்ள படத்திற்காக தற்போது இந்தியாவிலிருந்து 14 படங்கள் தேர்வாகியுள்ளன.
அதில், தமிழில் இருந்து தேர்வான ஒரே படம் ‘மண்டேலா’ என்பது குறிப்பிடத்தக்கது. வித்யா பாலனின் ஷெர்னி படமும், ஜோஜு ஜார்ஜ் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி பாராட்டுக்களைக் குவித்த ‘நாயட்டு’ படமும், பரிந்துரைப் பட்டியலில் உள்ளன. இந்தப் 14 படங்களைப் பார்த்துவிட்டு ஒரு படத்தை தேர்வு செய்து ஆஸ்கார் விருதுக்கு இந்தியா சார்பில் அனுப்புவார்கள். இதற்கான, திரையிடல் தற்போது கொல்கத்தாவில் நடந்து வருகிறது.
- கோவையில் நவீன வசதிகளுடன் கூடிய அவேரா இருதய மருத்துவமனை தொடக்கம்..,
- காணாமல் போனதாக தேடி வந்த 4 வயது சிறுவன் குவாரி பள்ளத்தில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு..,
- காலை உணவு திட்டத்தை கண்காணிக்க ஆசிரியர்கள் காலை 7.00 மணிக்கு வருகை தர வேண்டும் என்ற அறிவிப்பை திரும்ப பெற அறிக்கை..,
- கோவை மாவட்டத்தில் இருந்து, திருப்பூர் மாவட்டத்திற்கு சென்றுள்ள முதல்வர் விஜய்..,
- ஆம்புலன்ஸ் – கார் நேருக்கு நேர் மோதி கல்லூரி மாணவர் உட்பட 3 பேர் பரிதாப பலி..!
- தமிழ்நாடு பிராமண சமாஜம் சார்பில் காஞ்சி ஸ்ரீ மகா பெரியவர் கோவிலில் சிறப்பு பிரார்த்தனை..,
- அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் கோவில் பல்வேறு அபிஷேகம்..,
- 35 ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகான முன்னாள்மாணவர்கள், சந்திப்பு..,
- இருசக்கர வாகனங்களில் இருந்து ஹெல்மெட்களைத் திருடிச் செல்லும் சம்பவங்கள்..,
- 20 ஆண்டுகளுக்கு பிறகு, பத்தாம் வகுப்பு பயின்ற முன்னாள் மாணவ, மாணவியர்கள் நெகிழ்ச்சி சந்திப்பு..,




