• Sat. May 9th, 2026
WhatsAppImage2026-05-08at053925
previous arrow
next arrow
Read Now

ஆரல்வாய்மொழி புத்தனாறு கால்வாயில் சடலமாக மிதந்த 2மாத ஆண் குழந்தை..!

ஆரல்வாய்மொழி அருகே புத்தனாறு கால்வாயில் 2மாத ஆண் குழந்தை சடலமாக மீட்டு மூன்று கோணத்தில் விசாரணை.


கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே தாழக்குடி-சந்தைவிளை சாலையின் குறுக்கே செல்லும் நாஞ்சில் புத்தனாறு கால்வாயில் தற்காலிக பாலம் அமைந்துள்ள பகுதியில் இரண்டு மாதம் ஆன ஆண் குழந்தையின் சடலம் மீட்டு ஆரல்வாய்மொழி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து விளைநிலங்களையும், ஆற்றுப்படுகை அடையும் சேதப்படுத்தியது. இந்த நிலையில் தாளக்குடி அருகே சந்தை விளை பகுதியில் புத்தனாறு கால்வாயில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பாலத்தில் புதர்களுக்கு இடையே இன்று காலை இரண்டு மாதமே ஆன ஆண் குழந்தை சடலமாக கிடப்பதாக அப்பகுதி மக்கள் ஆரல்வாய்மொழி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.


இதுகுறித்த தகவலின்பேரில் விரைந்து வந்த போலீசார் குழந்தையின் சடலத்தை மீட்டு, அக்குழந்தை ஆற்றின் கரையோரம் வசித்துவந்த குடும்பத்தினரின் குழந்தையா அல்லது கள்ளக்காதல் விவகாரத்தில் பிறந்த குழந்தையா, குடும்பத் தகராறில் குழந்தையை கொன்று ஆற்றில் வீசினார்களா என மூன்று கோணங்களில் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.