சமீபத்தில் தென்னிந்திய திரையுலகத்தால் பேசப்பட்ட விஷயம் நாக சைதன்யா சமந்தா விவாகரத்து. இதைத் தொடர்ந்து சமந்தாவின் விவாகரத்துக்கான காரணங்கள் குறித்து சமூக வலைத்தளங்களிலும், சில யூடியூப் சேனல்களிலும் விவாதிக்கப்பட்டன.
இதையடுத்து தனது தனிப்பட்ட விவாகாரங்களில் யாரும் தலையிட வேண்டாம் என்றும், எந்த விதமான எதிர்மறை விஷயங்களும் தன்னை பாதிக்காது என்றும் அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். இதற்கு பல்வேறு சினிமா துறையினரும் சமந்தாவிற்கு ஆதரவு தெரிவித்தனர்.
இந்நிலையில் தன்னைப் பற்றி அவதூறாக செய்திகளைப் பரப்பியதாக சுமன் டிவி உள்ளிட்ட சில யூடியூப் சேனல்கள் மீது சமந்தா அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் வெங்கட் ராவ் என்கிற வழக்கறிஞர் தனது திருமண வாழ்க்கை குறித்தும், தனக்கு மற்ற ஆண்களுடன் தொடர்பு இருந்ததாகவும் தவறாகப் பேசியதாக, அவர் மீதும் வழக்கு தொடர்ந்துள்ளார்.