• Mon. Mar 2nd, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

தொழுநோய் கண்டுபிடிப்பு முகாமில் மத்திய குழுவினர் ஆய்வு..!

ByKalamegam Viswanathan

Aug 2, 2023

விருதுநகர் அருகே, காரியாபட்டியில் தீவீர தொழுநோய் கண்டுபிடிப்பு முகாமில் மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்.
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி தாலுகாவில், தீவிர தொழு நோய் கண்டுபிடிப்பு மற்றும் பரிசோதனை முகாம் ஜூலை- 17 முதல் ஆகஸ்ட்-3 வரை நடைபெறுகிறது.
இம்முகாமில், காரியாபட்டி வட்டாரத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் தொழுநோயால் பாதிக்கப்பட்ட நபர்களை கண்டுபிடிப்பு மற்றும் கணக்கெடுப்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த சிறப்பு முகாமினை, தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டத்தின் மத்திய அரசின் மேலிட பார்வையாளர்கள் மருத்துவர்கள் லில்லி, ஸ்ரீலேகா ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
உடன், தொழுநோய் கூடுதல் இயக்குனர் டாக்டர் அமுதா விருதுநகர் துணை இயக்குனர் யமுனா மதுரை துணை இயக்குனர் விஜயன், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ஆரோக்கிய ரூபன் ராஜ், மற்றும் மாவட்ட தொழுநோய் கட்டுபாட்டு அலுவலர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.