• Sat. Apr 27th, 2024

தமிழகத்தில் முதல் முறையாக அரசு ஊதியம் பெற்ற மாநகராட்சி பேரூராட்சி ஊராட்சி உள்ளாட்சி உறுப்பினர்கள்…

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் ஏற்படுத்தியுள்ள ஒரு அமைதி புரட்சியே. ஊராட்சி, உள்ளாட்சி உறுப்பினர்களுக்கு அரசின் மாத ஊதியத்தை இன்று பெற்றோம் என நாகர்கோவில் மாநகராட்சியின் முதல் மேயர் வழக்கறிஞர் மகேஷ், “அரசியல்டுடே” வுக்கு அளித்த பிரத்தியோக பேட்டியில் உற்சாகமாக தெரிவித்தார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த மார்ச் 7_ம் நாள் (07.03.23) நாகர்கோவில் மாநகராட்சியின் புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார்.

நாகர்கோவில் மாநகராட்சியின் 52 வார்டு உறுப்பினர்கள் (மேயர் உட்பட) முதல்வர் குழு படம் எடுத்த பின் உறுப்பினர்கள் அனைவரும் முதல்வரிடம் வைத்த ஒற்றை கோரிக்கை. மக்கள் பிரதிநிதிகள் ஆகிய எங்களுக்கும் மாத ஊதியம் கிடைக்க அரசு ஆணை வெளியிடுங்கள் என்ற கோரிக்கையை ஏற்று, தேர்தல் காலத்து வாக்குறுதியில் இல்லாத தமிழகத்தில் தகுதியுடைய குடும்ப தலைவிக்கு மாதம் ரூ1000.ம் உதவி தொகை என்ற அறிவிப்புக்கு மத்தியில் உள்ளாட்சி பிரதிநிதிகள் மேயர் முதல் கிராம பஞ்சாயத்து உறுப்பினர்கள் வரை அனைவருக்கும் மாத ஊதியம் என்ற சட்டத்தை நிறைவேற்றியுள்ளார்.
மேயருக்கு மாத ஊதியம் ரூ.30 ஆயிரம், துணை மேயருக்கு ரூ.15 ஆயிரம், உறுப்பினர்களுக்கு ரூ.10 ஆயிரம். இதுபோன்று பேரூராட்சி தலைவர்களுக்கு ரூ.10_ஆயிரம், துணை தலைவர்களுக்கு ரூ.5 ஆயிரம், உறுப்பினர்களுக்கு ரூ.2500 என தமிழக முழுவதும் உள்ள ஊராட்சி உறுப்பினர்கள் முதல் முதலாக மாத ஊதியம் பெறுகின்றார்கள். இதற்கு முன் மாதந்திர கூட்டத்திற்கு மாநகராட்சி உறுப்பினர்கள் ரூ.800 மட்டுமே பெற்று வந்ததுதான் கடந்த கால நிகழ்வு என, கடந்த காலத்தையும், நிகழ்காலத்தை ஒப்பிட்டு முதல்வர் ஸ்டாலின் கருணைக்கு எங்கள் நாகர்கோவில் மாநகராட்சி உறுப்பினர்கள் அனைவரும் கட்சி மாச்சரியம் இல்லாமல் நன்றி கடன் பட்டுள்ளோம் என மேயர் மகேஷ் புன்னகை பூக்க சொன்னார்.

தமிழகம் முழுவதும் உள்ள ஊராட்சி, உள்ளாட்சி பிரதிநிதிகள் வங்கி கணக்கில் இந்த ஊதியம் செலுத்தப்படுகிறது. ((ஜூலை_31) முதல் ஊதியத்தை உள்ளாட்சி உறுப்பினர்கள் பெற்றுள்ளார்கள்.

நாகர்கோவில் மாநகராட்சி உறுப்பினர்கள் கடந்த (ஜூலை 28)ம் நாள் கூட்டத்தில் கட்சி பேதமின்றி தமிழக முதல்வருக்கு நன்றி தீர்மானத்தை முதல் தீர்மானமாக நிறைவேற்றினோம்.

தமிழகத்தின் தென் கோடி முனை நாகர்கோவில் முதல் மாநகராட்சி உறுப்பினர்கள் கோரிக்கையை முதல்வர் ஏற்று செயல்படுத்தியுள்ளதில் சென்னை முதல் குமரி வரை உள்ள ஊராட்சி, உள்ளாட்சி உறுப்பினர்கள் பயன் பெற்றுள்ளது.

நாடாளுமன்ற மக்களவை, மேலவை, சட்டமன்ற உறுப்பினர்கள், சில மாநிலங்களில் உள்ள சட்டமன்ற மேலவை உறுப்பினர்கள் மாதம் அரசு ஊதியம் பெறுவது போல், தமிழகத்தில் உள்ள ஊராட்சி, உள்ளாட்சி உறுப்பினர்களும் ஊதியம் பெறும் இந்த திட்டம் இனி இந்தியாவிற்கே வழி காட்டப்போகும். தமிழக முதல்வர் ஸ்டாலினின் திட்டம் என பெருமிதம் பொங்க மேயர் மகேஷ் தெரிவித்தார்.

தமிழகத்தில் காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் மட்டுமே அல்லாது, பாஜகவினர் உட்பட என அனைத்து உள்ளாட்சி உறுப்பினர்களும் முக மலர்ச்சியுடன் வரவேற்று சாட்சி பகர்ந்த நாகர்கோவில் மாநகராட்சியின் காங்கிரஸ், பாஜக உறுப்பினர்கள் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரும், நாகர்கோவில் மாநகர காங்கிரஸ் கட்சி தலைவருமான நவினிடம் பேசிய போது, முதல்வரின் மக்கள் பணியின், மற்றொரு மணி மகுடம் என இதயம் நிறைந்த மகிழ்ச்சியை தெரிவித்தார்.

நாகர்கோவிலில் மாநகராட்சி பாஜக உறுப்பினரும், குமரி பாஜகவின் பொருளாளருமான முத்துராமனிடம், உள்ளாட்சி அமைப்பு மக்கள் பிரதிநிதிகள் மாத ஊதியம் திட்டம் பற்றி கேட்டபோது, நாகர்கோவிலில் மாநகராட்சி புதிய கட்டிட திறப்புவிழா அன்று நாகர்கோவில் மாநகராட்சி உறுப்பினர்கள் உடன் முதல்வர் ஸ்டாலினுடன் குழு உறுப்பினர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்ட பின்.உறுப்பினர்கள் அனைவரும் முதல்வரிடம் வைத்த கோரிக்கை. ஊராட்சி, உள்ளாட்சி மக்கள் பிரதிநிதிகளுக்கு மாத ஊதியம் தாருங்கள் என ஒட்டுமொத்தமாக கோரிக்கை வைத்தோம். முதல்வர் எங்கள் கோரிக்கையை(மார்ச்_7) ல் வைத்தோம். முதல் ஒரு புன்னகையுடன் அப்போது முதல்வர் தெரிவித்தது. அமைச்சர்கள், நிதித்துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து உகந்த நடவடிக்கை எடுக்கிறேன் என்ற உறுதி சொல்லை நான்கே மாதத்தில் நிறைவேற்றியதற்கு எனது மகிழ்ச்சியை நன்றியுடன் முதல்வருக்கு தெரிவிக்கிறேன் என சொன்னார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *