• Sun. Sep 6th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

உழவர் சந்தைகளில் தொன்மை சார் உணவகங்கள்

ByA.Tamilselvan

May 10, 2023

தமிழகத்தில் 25 உழவர் சந்தைகளில் தொன்மை சார் உணவகங்கள்..ஊட்டச்சத்து நிறைந்த சிறுதானிய கூழ் வகைகள் வழங்க ஏற்பாடு
25 உழவர் சந்தையில் தொன்மை சார் உணவகங்கள் அமைக்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சிறுதானிய கூழ் வகைகள், சிற்றுண்டிகள், மூலிகை சூப் வகைகள் போன்ற உணவுகளை வழங்கி நுகர்வோரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த அனுமதி அளிக்கப்பட்டது. மேலும் அரசாணையில்,உழவர் சந்தையில் அதிகாலை 4 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மட்டுமே தொன்மைசார் உணவகம் செயல்பட வேண்டும்.சிறுதானிய உணவகத்திற்கு இலக்கிய நயம் சார்ந்த பெயர் சூட்ட அறிவுறுத்தப்படுகிறது. பிளாஸ்டிக் பை, டம்ளருக்கு தடை விதிக்கப்படுகிறது.சிறுதானிய உணவுகள், புவிசார் குறியீடு பெற்ற உணவுப் பொருட்களை விற்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.