• Thu. Mar 19th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

இன்று மாலை உருவாகிறது மோக்கா புயல்..,11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!

Byவிஷா

May 10, 2023

இன்று மாலை மோக்கா புயல் உருவாக இருப்பதால், தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தென் கிழக்கு வங்கக்கடலில் நேற்று முன்தினம் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான நிலையில் அது நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. இதனைத் தொடர்ந்து தென்கிழக்கு வங்க கடலில் மே பத்தாம் தேதி யான இன்று மாலை மோக்கா புயல் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் கிழக்கு வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் இடையே மே 14ஆம் தேதி இந்த புயல் கரையை கடக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து தென்கிழக்கு வங்க கடலில் வலுவடைந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது வடமேற்கு திசையில் நகரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் 5 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதால் தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி காஞ்சி, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை மற்றும் நெல்லை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என தெரிவித்துள்ளது.