• Sat. Sep 12th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

திருப்பரங்குன்றம் திருக்கோயிலில் பஞ்சாமிர்தம் விற்பனை செய்யக்கோரி இந்துமக்கள்கட்சி செய்தி அறிக்கை!

ByKalamegam Viswanathan

Aug 10, 2026

தமிழகத்தில் இந்துசமய அறநிலையத்துறை கட்டுபாட்டில் இயங்கக்கூடிய திருக்கோயில்களில் பிரசாதத்திற்காக விற்பனை செய்ய தனியார் நிறுவனங்களுக்கு அளித்த டெண்டர்கள் அனைத்தும் ரத்து செய்து திருக்கோயில்கள் நிர்வாகம் சார்பில் பிரசாதங்கள் பக்தர்களுக்கு விற்பனை செய்யப்படுமென்று கடந்த ஜுன் மாதத்தில் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.ரமேஷ் அவர்கள் உத்தரவிட்டுருந்தார்.
இந்த உத்தரவினை அன்று இந்துமக்கள்கட்சி வரவேற்றது.

ஆனால் அந்த உத்தரவு காற்றில் பறக்கவிடும் வகையில் தமிழ்கடவுள் முருகப்பெருமானின் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் புளியோதரை,பொங்கல்,முறுக்கு போன்ற பிரசாதங்களை தான் திருக்கோயில் நிர்வாகம் தயாரித்து பக்தர்களுக்கு விற்பனை செய்து வருகிறார்களே தவிர முருகப்பெருமானுக்கு உகந்த பிரசாதமான பஞ்சாமிர்தத்தை மட்டும் தயாரிக்கவில்லை. அழகர் கோயிலில் தயாரிக்கும் பஞ்சாமிர்தத்தை கொண்டு வந்து தான் இங்கு விற்பனை செய்து வந்தது திருக்கோயில் நிர்வாகம்,.

அதுவும் கடந்த ஒரு மாத காலமாக நிறுத்தி வைக்கப்பட்டது. முருகன் கோயில் என்றாலே பஞ்சாமிர்தம் தான்.இதனால் திருப்பரங்குன்றம் திருக்கோயிலுக்கு முருகப்பெருமானை தரிசிக்க வரும் பக்தர்கள் பஞ்சாமிர்தம் கிடைக்காமல் ஏமாற்றமும் வேதனையும் அடைந்துள்ளனர்.

முருகன் கோயில் என்றாலே பஞ்சாமிர்தம் தான். அந்த பஞ்சாமிர்தம் தயாரிக்க முன்னுரிமை அளிக்காமலும், அமைச்சரின் உத்தரவை மதிக்காமலும் செயல்பட்டு வரும் திருப்பரங்குன்றம் திருக்கோயில் நிர்வாகத்தை இந்துமக்கள்கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

ஆகவே அமைச்சரின் உத்தரவு, பக்தர்களை ஏமாற்றும் உத்தரவென்று இல்லாமல் திருக்கோயில் நிர்வாகத்தால் பஞ்சாமிர்தம் தயாரிக்க முன் வரவேண்டும். இல்லையெனில் பஞ்சாமிர்தம் தயாரிக்க முடியவில்லை என்றால் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைத்து பக்தர்களுக்கு முருகப்பெருமானின் பிரசாதமான பஞ்சாமிர்தம் திருக்கோயிலில் தினந்தோறும் கிடைக்கும் வகையில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென முருகப்பக்தர்கள் நலன் கருதி இந்துமக்கள்கட்சி சார்பில் திருக்கோயில் நிர்வாகத்தையும், இந்துசய அறநிலையத்துறையையும் இந்த அறிக்கையின் மூலமாக வலியுறுத்தியுள்ளனர்.