• Sat. Sep 26th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

முதுமலையில் யானைகளுக்கு எடை ,உயரம் கணக்கெடுக்கும் பணிதுவக்கம்

முதுமலையில் வளர்ப்பு யானைகளுக்கு எடை மற்றும் உயரம் கணக்கெடுக்கும் பணி இன்று நடைபெற்றது,
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் 23 வளர்ப்பு யானைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன இதில் மூன்று மாதத்திற்கு ஒரு முறை இந்த வளர்ப்பு யானைகளுக்கு எடை பரிசோதனை நடைபெறுவது வழக்கம்,


இன்று தொரப்பள்ளி பகுதியில் உள்ள எடை மேடையில் முதுமலையில் வளர்க்கப்படும் யானைகளுக்கு யானைகளின் எடை மற்றும் உயரம் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது இதில் இன்று வளர்ப்பு யானைகளான சங்கர், ஜம்பு, வில்சன், சுமங்களா, ஜான், இந்திரா, உதயன், கணேஷ், ஆகிய 8 யானைகளுக்கு கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. மற்றும் யானைகளுக்கு உயரம் கணக்கெடுக்கப் பட்டது.மேலும் காமாட்சி, பொம்மி இரண்டு யானைகளுக்கு தெப்பக்காடு பகுதியில்இன்று மாலை கணக்கெடுக்கும் பணி நடப்பதாக தெரிவித்தார்..