• Thu. Sep 24th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைப்பு..!

Byவிஷா

May 1, 2023

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.171 குறைந்துள்ளதால் ஹோட்டல் மற்றும் டீக்கடை உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஒவ்வொரு மாதமும் 1ஆம் தேதியன்று எண்ணெய் நிறுவனங்கள் புதிய விலையை நிர்ணயித்து வருகின்றன. இந்நிலையில், மே மாதத்திற்கான விலை நிர்ணயம் செய்யப்பட்டு இன்று அறிக்கப்பட்டுள்ளது. இதில், வணிக ரீதியாக பயன்படுத்தப்படும் கியாஸ் சிலிண்டரின் விலை ரூ.117 குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில் வணிக சிலிண்டர் ரூ.2,021க்கு விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து இரண்டு மாததங்களாக வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை குறைந்து வருவதால் ஹோட்டல் மற்றும் டீக்கடை உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால், வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லாதது இல்லத்தரசிகளை கவலை அடைய வைத்திருக்கிறது.