• Mon. Aug 31st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

மதுரை சித்திரை திருவிழாவிற்கான டெண்டர் வெளியீடு..!

Byவிஷா

Apr 5, 2023

மதுரையில் பிரசித்தி பெற்ற மீனாட்சியம்மன் சித்திரை திருவிழாவிற்கான டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது.
மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவிற்காக, ஆடி வீதியில் பந்தல் அமைத்தல், சித்திரை வீதிகளில் தடுப்புகள் அமைத்தல், ஆடி விதிகளில் வர்ணம் பூசுதல், தேர் அலங்கரித்தல், திருக்கல்யாண மண்டபத்தில் பந்தல் அமைத்து பூ அலங்காரம் செய்தல் உள்ளிட்ட பணிகளுக்காக 60 லட்சத்து 13 ஆயிரம் ரூபாய் மதிப்பில் ஒப்பந்தப் புள்ளியை கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. டெண்டர் எடுக்க விரும்பும் நிறுவனங்கள் கோயில் நிர்வாகத்தில் விண்ணப்பம் பெற்று விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.