• Fri. Sep 4th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

கோவில்பட்டியில் ஆட்டோக்களுடன் போராட்டம் நடத்திய ஆட்டோ ஓட்டுநர்கள்..!

Byவிஷா

Mar 29, 2023

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் இயக்கப்படும் மினிபேருந்துகள் விதிகளை மீறி செயல்படுவதாகக் கூறி ஆட்டோ ஓட்டுநர்கள் தங்களது ஆட்டோக்களுடன் போராட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகரில் மினிபஸ்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டு வழித்தடத்தில் இயக்கமால் விதிமுறைகளை மீறி செயல்படுவதாகவும், மேலும் அதிக கட்டணம் வசூலித்து வருவதாகவும், குண்டர்களை வைத்து மிரட்டுவதாகவும், விதிமுறைகளை மீறி மினிபஸ்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆட்டோ ஓட்டுநர்கள் தங்களது ஆட்டோக்களுடன் வட்டாரபோக்குவரத்து அலுவலகத்தினை முற்றுக்கையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையெடுத்து அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். இரு தரப்பினையும் அழைத்து பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை தொடர்ந்து போராட்டத்தினை கைவிட்டனர். இதனால் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.